பெலவீனர்களின் அறிக்கைகள்

பெலவீனர்களின்  அறிக்கைகள்

பெலவீனமானவர்களாகிளியை போன்று திரும்ப திரும்ப பெலவீனன் தான் பெலவானென்று சொல்லக்கடவன்
“பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.”(யோவேல் 3 :10)
என்ற வார்த்தையை சொல்வதில் எந்த பயனுமில்லை, அவர் மீண்டும் பிறக்காதவரை.
பெலவீனர் , பெலனான சர்வவல்லவரினால் பிறக்கும்போது மட்டுமே பெலவானாய் மாற முடியும் . அதுவரைக்கும் , அவர் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் அவர் அறிக்கை செய்யலாம் ஆனால் எதுவுமே நடக்காது.
இயேசு யூதர்களின் அதிகரியினத்தில் சொன்னார் :
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3 :3)
மேலும் :
……..ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 3: 5)
” நிக்கோதேமுவுக்கு சட்டத்தை குறித்து நூட்பமான அறிவும் மற்றும் தீர்க்கதரிசனங்களை குறித்த ஞானமும் இருந்து என்ன பயன் ? அவர் மீண்டும் பிறக்காத பட்ச்சத்தில் ?
தேவனுடைய வார்த்தையை செயல்படுத்தாமல் வெறும் அதை குறித்த ஞானம் மட்டும் போதுமானதல்ல , ஆனால் அதை செயல்படுத்த அவர் ஆவியினால் பிறக்க வேண்டும் .
“புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.” (II கொரிந்தியர் 3 :6)
எனவே நடைமுறையில் வாழாத , செயல் படுத்தாத, ஆவியினாலல்லாத வேதாகம வசனங்களை தொடர்ந்து சொல்வதை நிறுத்துங்கள் .
திரும்ப திரும்ப வேதாகம வசனங்களை கூறுவது மதத்தை ஆதரிக்க மட்டுமே உதவியாயிருக்கிறது .
தண்ணீரினால் மற்றும் பரிசுத்த ஆவியினால் பிறக்காதவரை , இந்த உலகில் உங்களது விசுவாசம் நிலைத்திருக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை . மற்றும் இவுலகத்தின் பாவத்தை நீங்கள் ஜெய்னகொள்ளாமல் எப்படி உங்களது ஆத்துமாவை நீங்கள் இறைச்சிக்க முடியும் ?
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.(I யோவான் 5 :4 )
இதை தீவிரமானதாக நீங்கள் கருதுவீர்களெனில் உங்களை சுற்றியுள்ள ஏராளமான அவிசுவாசிகள் மற்றும் தொந்தரவுக்குள்ளான கிறிஸ்த்தவர்களை பாருங்கள்.
அவர்கள் எல்லோரும் மாமிசத்தினால் பிறந்த போதகர்கள் வேலையினால் ஏற்பட்ட கனிகளாவர் . அவர்கள் ஆத்துமாக்கள் இரட்சசிப்பை விட , ஆலயத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் காணிக்கைகளை குறித்து கவனமாய் , அக்கறையாக இருப்பார் . அதனால் தன் இப்படிப்பட்ட போதகர்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும் இரட்ச்சிக்கப்படுவீர்களென பிரசங்கிக்கிறார்கள் .
ஒருவர் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படியாத பட்சத்தில் அவரை நம்புவது அல்லது ஏற்று கொள்வதிலோ எந்த வித்தியாசமும் இல்லை .
ஆனால் , தேவனுக்கு கீழ்படிவது எப்படி , ஆவியிலில்லாமல் ?
பரிசுத்த ஆவி இல்லாமல் அப்படி ஒருவரால் ஆவியில் இருக்கமுடியும்?
இயேசு சொன்னார்:
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவான் 3:6)
மேலும்:
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். (யோவான் 3:7)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *