விசுவாசத்தின் சான்று

விசுவாசத்தின் சான்று

பல எகிப்திய தேவர்களின் மத்தியில், ஆடு / ஆட்டுக்குட்டியின் தலையை கொண்ட ஒன்று இருந்தது. இக்காரணத்தினால், ஆடு வளர்ப்பவர்கள் அவர்களிடையே வரவேற்கப்படவில்லை. ஆடு வெட்டுதல் குறிப்பாக அவைகளின் தியாகம் எகிப்திய நம்பிக்கையை பாதித்தது.

இதனால் ஒரு ஆட்டை பலியிட்டு, அதன் இரத்தத்தை வீட்டு வாசல்களில் பூசும்படி இஸ்ரவேலர்களிடத்தில் தேவன் கேட்டபோது, அது அவர்களுக்கு எளிமையாக இருந்திருக்காது. இதற்கு துணிச்சல் தேவை. இது நிச்சயமாக எகிப்தியர்களை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல், யூதர்களுக்கு எதிராக அவர்களை மேலும் ஆக்ரோஷமாக்கும்.

தேவனுக்கு பலியிட்டு தங்கள் உயிரை பணயம் வைப்பதற்கும், அப்படி செய்வதை தவிர்த்து தங்களை “காப்பாற்றி” கொள்வதற்கும் இடையே இஸ்ரவேல் புத்திரர் தேர்வுசெய்ய வேண்டியதாயிருந்தது.

மனமாற்றப்பட்டவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உலகிற்கு முன்பாக இதே குழப்பத்தை தான் அனுபவிக்கிறார்கள். உங்கள் விசுவாசத்தின் சான்று இதை சார்ந்து தான் உள்ளது.

தேவனை உணர்வதை விட, அவரது குரலுக்கு கீழ்ப்படியும் துணிச்சலை கொண்டிருப்பதே, விசுவாசத்தை செயல்படுத்துவது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

”தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்” ( மத்தேயு 16 : 25 ).

உணர்ச்சிகளால் ஒருவரும் இரட்சிக்கப்படுவதில்லை. அணுகுமுறை, செயல் மற்றும் வெளிப்படுத்தப்படும் விசுவாசம் முதலியவை இரட்சிப்புக்கு தேவை. இதுதான், துணிச்சல்!

https://www.universal.org/en/bispo-macedo/proof-of-faith

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *