2020 அதே மாதிரியாக இருக்குமா அல்லது மாற்றப்படுமா?

2020 அதே மாதிரியாக இருக்குமா அல்லது மாற்றப்படுமா?

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையும், குடும்பங்களும் தண்ணீரிலிருந்து திராட்சை இரசத்திற்கு மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது? கர்த்தராகிய இயேசு நிகழ்த்திய முதல் அதிசயம் நிகழ்ந்தது போல:

”மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.”(யோவான் 2 : 1-2)

கர்த்தராகிய இயேசு திருமணத்திற்கு அழைக்கப்பட்டதால் மட்டுமே தண்ணீரை திராட்சைரசமாக மாற்ற முடிந்தது. உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை விட்டுவிட்டு, உங்களை வெற்றிடமாக்கிக் கொண்டு,உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அவரை அழைக்காத வரை, இந்த மகிமைக்குரிய வேலையை அவரால் செய்ய முடியாது.

”திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.”(யோவான் 2:3)

வேறு எந்த வழியும் இல்லை, விரைவிலோ அல்லது பிற்பாடு, விருந்துபச்சாரமும், திராட்சைரசமும் முடிவுக்கு வரும். பின்னர் பழைய நினைவுகள், குற்றமுள்ள மனது, செலுத்த வேண்டிய தொகை வருகிறது, மற்றும் வெறுமை தொடர்கிறது!

”அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.” (யோவான் 2 : 4-5)

கர்த்தராகிய இயேசுவின் போதனைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்ற மதிப்புமிக்க குறிப்பை மரியாள் நமக்கு விட்டுச்சென்றார். ஊழியர்களுக்கு, அவருக்கு கீழ்ப்படியும்படி கட்டளையிடுவதில் அவளுடைய அணுகுமுறை கர்த்தராகிய இயேசு தனக்கு மேலே இருந்ததைக் காட்டுகிறது. நாம் எப்போதும் கர்த்தராகிய இயேசுவுக்கு எல்லா மரியாதையையும், கீழ்ப்படிதலையும், மகிமையையும் கொடுக்க வேண்டும்!

”யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.”(யோவான் 2 : 6-7)

நாம் இந்த கற்சாடிகளைப் போன்றவர்கள் தாம். நாம் தேவனின் பிரசன்னத்திற்கு வரும்போது, ​​நாம், நமது விருப்பங்கள், கருத்துக்கள், மற்றும் பாவங்களால் நிறைந்தவர்களாக இருக்கிறோம். ஆனால் நம் வாழ்க்கை உண்மையில் வெற்றிடமாக உள்ளது.

கற்சாடிகளுக்குள் நிரப்பப்பட்ட நீர், தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது. அது நம்மை முழுமையாக நிரப்ப வேண்டும், இதனால் எழும் சந்தேகங்களையும் தீய எண்ணங்களையும் நாம் கடிந்து கொள்ள முடியும்.

”அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.”(யோவான் 2 : 8-10)

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தண்ணீரிலிருந்து திராட்சைரசத்திற்கான மாற்றம் ஏற்பட்டது, விருந்தின் எஜமானருக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான பாதையில். அதாவது, நம் வாழ்நாள் முழுவதும் கீழ்ப்படிதலின் பாதையில் நாம் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் கீழ்ப்படிதலுடன் நடந்து செல்லும் வரை , பரிசுத்த ஆவியின் மாற்றத்தின் பணி நடக்கிறது.

திராட்சைரசம், நமக்கு சுவையையும், ஜீவனையும் தரும் பரிசுத்த ஆவியானவரை அடையாளப்படுத்துகிறது. முதலாவதாக, அவர் கற்சாடிகளாக இருப்பவர்களுக்குள் தம்மை வெளிப்படுத்துகிறார், எனவேதான், நமக்குள் நிகழ்ந்த மாற்றத்தின் ருசியை, மற்ற அனைவரும் சுவைக்க முடியும்.

”இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.” (யோவான் 2:11)

ஆகவே, 2020, 2021, 2022… உங்கள் வாழ்க்கையில் தேவனின் மகிமையின் வெளிப்பாடுகளால் நிரப்பப்படும், யார் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்களோ, இல்லையோ என்பதைப் பொருட்படுத்தாமல். நாளுக்கு நாள் உங்களைத் தணிக்கும் புதிய திராட்சைரசம் உங்களிடம் ஏற்கனவே உள்ளது!

பங்களிப்பு: பிஷப் ஆண்ட்ரே கஜூ

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *