கடந்த காலத்தில் விசுவாசத்தின் தலைவர்களால் எப்படி விசுவாசத்தில் நிலைத்திருக்க முடிந்தது?
சமீபத்தில், கடந்த காலத்தில் விசுவாசத்தின் தலைவர்களால் எப்படி விசுவாசத்தில் நிலைத்திருக்க முடிந்தது என்பதைப் பற்றி நான் யோசித்தேன் மற்றும் அதை புரிந்து கொள்ள தேவனிடம் கேட்டேன். ஏனென்றால் இப்போதெல்லாம் கடினமான விஷயம் என்பது விசுவாசத்தைக் கொண்டிருப்பது அல்ல, ஆனால் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது, நம்முடைய இரட்சிப்பை தக்க வைத்துக் கொள்வது. எனவே, விசுவாசத்திலிருந்து விலகாத அந்த தேவனுடைய மனுஷர்களின் ரகசியம்தான் என்ன?
“மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.” யாத்திராகமம் 33:7-11
மோசே பொறுப்புகள் நிறைந்த ஒருவராகவும், ஒரு தேசத்தின் தலைவராகவும் இருந்தாலும், அவர் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டியதாயிருந்தாலும் கூட (ஏனெனில் நடந்த அனைத்தும் அவரின் வழியாக தான் செல்ல வேண்டும்), அவர் என்ன செய்தார் என்று பாருங்கள்.
தேவனுடன் தனிமையில் இருக்க மோசே நகரத்தின் முகாமிலிருந்தும், எல்லோரிடமிருந்தும் தள்ளி வெகு தொலைவில் ஒரு கூடாரத்தை அமைத்தார். அங்கே தேவன் அவருடன் பேசினார். மோசே தேவனுடனான தனது தருணத்தைக் கொண்டிருந்தார். தன் பிதாவினுடனான தன்னுடைய உறவிற்கு உணவூட்டுவதற்காக அந்த நேரத்தை அவர் பிரித்தார்.
பெரும்பாலான மக்கள் தங்கள் விசுவாசத்தில், தங்கள் போராட்டங்களில் தோல்வியடைந்து, அதனால் தங்களுடைய இரட்சிப்பை இழப்பதற்கான காரணம், அவர்களுக்கு தேவனுடனான ஒரு வாழ்க்கை இல்லாததால் தான்.
அவர்கள் இந்த உலகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனோடு ஒரு உறவென்பது இல்லை. அவர்களுக்கு தேவனுடனான தருணங்கள் இல்லை, அல்லது (ஒருவேளை அவர்களுக்கு இருந்திருந்தால்) இனிமேலும் அது இல்லை. உண்மையில், தானாகவே எல்லாம் நடக்கும் என்றெண்ணி, எல்லாவற்றையும் ஆட்டோ-பைலட்டில் செல்லுமாறு விட்ட, நம் மத்தியில் முன்பு இருந்த ஆனால் இப்போது இல்லாத சில மனுஷர்களுக்கு என்ன நடந்தது.
நாம் செய்கின்ற வேலை, ஆலயத்தில் நம்முடைய வருகை, பைபிள் அறிவு போன்றவை அல்ல, ஆனால் தேவனுடனான ஒரு வாழ்க்கை, அவருடனான ஒரு நிலையான ஐக்கியம் மட்டுமே நம்மை தொடர்ந்து முன்னோக்கி செல்ல வைக்கிறது.
கடந்த கால மனுஷர்கள் செய்ததை நாம் செய்து, தேவனுடனான நம் உறவிற்கு தினமும் முன்னுரிமை அளித்தால், இது கர்த்தராகிய இயேசுவிடம் கூட இருந்தது (இது அவருக்கே வேண்டியிருந்தால், நிச்சயமாக நமக்கும் இது வேண்டும்), நாம் நம் விசுவாசத்தில் உறுதியாக இருப்போம், இறுதி வரை !!!
“அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.” (லூக்கா 6:12-13)
Link in English: a life with God