உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உள்ளது

யாக்கோபின் வாழ்க்கையில் – ஈசாக்கின் மகனும் ஆபிரகாமின் பேரனும் – வீட்டை விட்டு ஓட வேண்டிய நேரம் ஒன்று இருந்தது.

அவர் வழியில் என்ன கிடைக்கும் என்று தெரியாமல் தொலைதூர தேசங்களுக்கு ஓடினார். முதன்முறையாக வீட்டை விட்டு வெளியேறிய அவர் முற்றிலும் தனியாக இருந்தார்.

அந்த நேரத்தில், ஒருவர் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறுவது வழக்கத்திற்கு மாறானது, ஏனெனில் ஒரு ஒன்றிணைந்த குடும்பம் வலுவாகவும், தங்கள் நிலங்களையும் பொருட்களையும் வைத்திருக்க முடிந்தது. ஆகையால், ஒரு நபர் உண்மையிலேயே வெளியேறியாக வேண்டும் என்றால் மட்டுமே வெளியேறுவார்.

அங்கே, யாக்கோபு பாதுகாப்பாக இருக்கவில்லை. அவர் அவருடன் எடுத்துச் சென்ற ஒரே மதிப்புமிக்க பொருள் ஒரு எண்ணெய் பாட்டில் மட்டுமே. தூங்க, அவர் ஒரு பாறையை தலையணையாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தேவன் மட்டும் தான் தமக்காக இருப்பதை யாக்கோபு புரிந்துகொண்டார், ஆகவே அவர் உன்னதமானவருடன் பொருத்தனை செய்ய முடிவு செய்தார் (ஆதியாகமம் 28-ல் முழு கதையையும் நீங்கள் படிக்கலாம்).

இந்த கதை உங்களுடன் எவ்வாறு தொடர்புடையது?

யாக்கோபைப் போலவே, இன்று, தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் மட்டுமே உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். பரலோக வாயில் அவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதனால்தான், ஜூன் மாதம் முழுவதும் உள்ள அனைத்து யூ.சி.கே.ஜி.களிலும், தேவனுடன் உண்மையான உடன்படிக்கை செய்ய விரும்புவோருக்கு பெத்தேலில் யாக்கோபின் பொருத்தனையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

தேவனுக்கு உண்மைத் தன்மையுடன் இருப்பது என்பது ஒரு வாழ்க்கை மாற்றத்திற்கான முதல் படியாகும். தனது பெற்றோரின் கவனிப்பு, ஆறுதல் மற்றும் நிதிப் பாதுகாப்பிலிருந்து வெகு தொலைவில் வந்து, முதன்முறையாக தனியாக இருந்தபோது யாக்கோபு பெத்தேலில் கற்றுக்கொண்டது இதுதான். தனியாகவும் ஆபத்திலும் அவர் தேவனைச் சார்ந்து இருந்தார். தேவனை பின்பற்றினார். தன் கைகளில் வந்தவற்றின் முதல் பலன்களை தேவனிடம் திருப்புவதாக அவர் பெத்தேலில் பொருத்தனை செய்தார்.

இதே விசுவாசத்தில் நாங்கள் பெத்தேலுக்குப் போகிறோம். தேவன் உங்கள் மனதைத் திறந்து உங்கள் நிதி வாழ்க்கைக்கு சிறந்த தரிசனங்களையும் உத்வேகங்களையும் தருவார் என்ற விசுவாசத்தோடு, உங்கள் பெயரை காகிதத்தில் எழுதி, ஒவ்வொரு இரவும் உங்கள் தலையணை அடியில் வைக்கவும். யாக்கோபின் முன்மாதிரியைப் பின்பற்றி, விசுவாசத்தின் அடையாளச் செயகாக இதே காகிதம் பெத்தேலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஜூன் மாதத்தில் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில், தேவனுடன் பொருத்தனைசெய்தவர்கள் பெத்தேலில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுவார்கள். ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை முதல் அபிஷேகம் யோசனைகள், பார்வை மற்றும் ஞானத்திற்காக தலையில் இருக்கும். ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை, அவர்களின் திறமைகள் மற்றும் திறன்கள், அவர்கள் தொடும் விஷயங்கள், ஆகியவற்றில் வெற்றிபெற தசமபாகக்காரர்கள் தங்கள் கைகளில் இரண்டாவது அபிஷேகம் பெறுவார்கள். ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை இறுதி அபிஷேகம் அவர்களின் எல்லா வழிகளிலும் வழிநடத்துவதற்காக காலில் இருக்கும்.

இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து 93846 38738 என்ற எண்ணில், எங்கள் 24 மணி நேர ஹெல்ப்லைனை அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும். தயவுசெய்து உங்கள் முகக்கவசத்தை அணிந்து வந்து மற்றும் அனைத்து சமூக இடைவெளி வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும்.

கூட்டம்: பெத்தேல்: பரலோக வாயில்
நாள் மற்றும் நேரம்: ஜூன் 6 ஞாயிறு காலை 9.30 மணிக்கு (காலை 8.00 மணிக்கு)
இடம்: உங்கள் உள்ளூர் யு.சி.கே.ஜி கிளை https://uckg.in/contact-us/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*