கடந்த வெள்ளிக்கிழமை தியானித்தலில் (univervideo.com இல் பார்க்கலாம்), உடன்படிக்கை பெட்டியைக் கொண்டு வருவதில் தாவீதின் மகிழ்ச்சியை நாம் கவனித்தோம். அவர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாரெனில், அவர் தனது குடிமக்களுக்கு முன்னால் நடனமாடுவதை கூட பொருட்படுத்தவில்லை. அவரது கசப்பான மனைவி மீகாளின் அவமதித்தலையும் அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால், மீகாளைப் பொறுத்தவரை, அதை பற்றி மற்றொரு இடுகையில் நாம் எழுதுவோம்…

ஆழ்மனதில், தாவீதிற்கு எப்போதும் தேவனுக்கு ஊழியம் செய்யும் விருப்பம் இருந்தது. தாவீது, ஒரு குழந்தையாக இருந்தபோது, அவரிடம் சொன்ன கதைகளில் வரும் இஸ்ரவேலின் கூடாரங்கள் மற்றும் லேவியர்கள் அங்கு இரவும் பகலும் எப்படி வேலை செய்தார்கள் என்பதை அவர் மிகவும் கேட்க விரும்பியதைப் போன்று நான் கற்பனை செய்கிறேன். அவர் ஒரு லேவியரின் மகன் அல்ல என்பதால், தேவனுக்கு ஊழியம் செய்துகொண்டு வாழ்கின்ற ஒரு சலுகை பெற்ற செயல்பாட்டை மட்டுமே அவர் கனவு கண்டார்.

தாவீதிற்கு தெரியாதது என்னவென்றால், தேவன் இருதயங்களைப் பார்க்கிறார். தேவன் அவரைப் பார்த்தபோது, அவர் ஒரு உண்மையான லேவியரினுடைய இரத்தமாக இல்லாவிட்டாலும் கூட, அவரை ஒரு உண்மையான லேவியராகப் பார்த்தார். அந்த நேரத்தில் லேவியர்களே கூட கூடாரத்தின் பழக்கவழக்கங்களுக்குத் திரும்ப முற்படவில்லை என்றாலும், தாவீது அவர் ராஜாவானவுடன், செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுதான் என்று வலியுறுத்தினார். அவர் எருசலேமை வென்றார், பின்னர் உடன்படிக்கைப் பெட்டியை அதனுடைய சரியான இடத்திற்கு கொண்டு வந்தார்.

தாவீது தனது அரண்மனைக்கு முன்னால் கூடாரத்தைக் கட்டினார். ஒவ்வொரு நாளும் அதைப் போற்றுவது மட்டுமல்லாமல், அதன் அருகில் இருப்பதற்காகவும், தன்னை அதன் ஒரு பகுதியாக உணர்வதற்காகவும். சங்கீதம் 84 இல் இதை அவர் நன்றாகக் கூறுகிறார்:

“சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.) ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.”

தாவீதிற்கு தேவனுக்கு ஊழியம் செய்யும் விருப்பம் இருந்தது. எனவே அவர் இஸ்ரவேலின் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால்தான் கர்த்தருடைய வீட்டைக் கட்டியெழுப்ப ஒரு தீர்க்கதரிசியோ, லேவியரோ அல்லது ஆசாரியரோ உந்தப்படாமல், ஆனால் தாவீது உந்தப்பட்டார்.

தேவனுடைய இருதயத்திற்குப் பின்பாக தமது இருதயத்தைக் கொண்டவர்களின் முதல் பண்பு இதுதான்: வாழ்நாள் முழுவதும் தேவனுக்கு ஊழியம் செய்வது. இது தேவனால் மட்டுமே பார்க்க முடிந்த ஒரு ஆவிக்குரிய பண்பு. அதனால்தான் அவர் தமது ஆவியைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறார்.

இதனால்தான் பலர் அவருடைய ஆவியைப் பெறுவதில்லை.
அவர்கள் எதற்காக விரும்புகிறார்கள்? ஒருவேளை நாம் லேவியர்களாக அவருக்கு ஊழியம் செய்ய அவர் வந்திருந்தால்?

Link in English: David’s joy

கிறிஸ்டியானே கார்டோசோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*