வெற்றிகரமாக இருப்பது, தானாகவே மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்தும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காதபோது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அமைதியைக் காண வேண்டிய இடத்தில், அதற்கு பதிலாக நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறீர்களா? நீங்கள் கற்பனை செய்த வளமான வாழ்க்கை அதற்கு பதிலாக கடனால் அழிக்கப்படுகிறதா? இதைச் சொல்வது பைத்தியக்காரத்தனமாக கூடத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சபிக்கப்பட்டதைப் போன்று இருக்கிறீர்கள்!

பலர் தங்கள் வாழ்க்கையில் முக்கிய தோல்விகளை நிராகரிக்கிறார்கள், ஆனால் அவைகளிலிருந்து கற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அதின் வேருக்குச் செல்வதில்லை. நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு வேர் உள்ளது, அது ஒரு நிலையான தோல்வி அல்லது துரதிர்ஷ்டம் என்றால், இன்னும் மோசமான ஒன்றின் வேலையாக இருக்கலாம்.

ஒருபோதும் வேலையில் முன்னேற்றமில்லை
குடும்பத்தில் இயங்கும் ஒரு தலைமுறை பிரச்சினை
எப்போதும் தவறான ஆண் / பெண்ணை ஈர்க்கிறீர்கள்
காதலில் விழுந்தாலும் மீண்டும் நீங்கள் காதலிக்கப்படுவதில்லை
குரல்களை கேட்பது
கட்டுப்படுத்த முடியாத கோபம்
சித்தப்பிரமை

இவை அனைத்தும் தற்செயல் நிகழ்வா அல்லது தீவிரமான ஒன்றின் விளைவா, நீங்கள் என்ன கூறுவீர்கள்? அது எதுவாக இருந்தாலும், இந்த விஷயங்களுக்கு எதிராகப் போராட ஜெபம் நமக்கு அதிகாரம் அளிக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யு.சி.கே.ஜி உதவி மையத்தில், பிரச்சினைகளின் மூல காரணத்தை அகற்ற வலுவான ஜெபங்களைக் கொண்ட ஆவிக்குரிய சுத்திகரிப்பு சேவையை நாங்கள் நடத்துகிறோம்.

இயேசு கூறியிருக்கிறார், “நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.” (உன்னதப்பாட்டு 2:1)

இந்த வசனத்தின் அடிப்படையில், கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் வீட்டில் நீங்கள் 7 நாட்கள் வைக்கப்போகும் ஒரு ரோஜாவை ஆசீர்வதிக்க நம் விசுவாசத்தை நாம் பயன்படுத்துவோம். ஒளி இருக்கும் இடமெல்லாம் இருளும் சாபங்களும் மேலோங்க முடியாது.

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13)

வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு எங்களுடன் இணைந்திருங்கள். அங்கு நீங்களும் உங்கள் வீடும் எல்லா எதிர்மறைகளிலிருந்தும் விடுபடுவீர்கள் என்பதை தீர்மானிக்கும் விடுதலையையின் ஜெபத்தை நாங்கள் செய்வோம்.

உங்களுடன் ஒரு ரோஜாவைக் கொண்டு வர மறக்காதீர்கள்!

கூட்டம்: ஆவிக்குரிய சுத்திகரிப்பு கூட்டத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட ரோஜாவின் வெள்ளிக்கிழமை
நாள் மற்றும் நேரம்: வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு (காலை 8 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு)
இடம்: உங்கள் அருகிலுள்ள யு.சி.கே.ஜி சபை:  https://uckg.in/contact-us/

 

 

Event Details

Organizer : UCKG Help Centre - India

Start Date : 2021-04-09

End Date : 2021-05-21

Time : 7.00 PM

Event Venue