நாம் உலகிற்கு வந்த தருணத்திலிருந்து, குறிப்பாக சரி மற்றும் தவறு என்று தெரிந்துகொள்ளும் வயதை எட்டும்போது வெளிப்படும் ஒரு உலகிற்குரிய சிந்தனையை நாம் கொண்டிருக்கிறோம். நாம் பிறந்த போதே பாவிகள், எனவே இந்த உலகிற்குரிய சிந்தனையை நாம் தவிர்க்க முடியாது.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (ரோமர் 12: 2)

இருப்பினும், ஒரு புதிய சிந்தனையை நாம் கொண்டிருக்க முடியும். எனினும், புதிய ஒருவராக மாறுவது அவசியம்; ‘யாக்கோபுகள்’ ஆக இருப்பதை நிறுத்தி ‘இஸ்ரவேல்களாக’ மாற வேண்டும் (ஆதியாகமம் 32). அதைச் செய்ய இந்த 21 நாட்களை எடுத்துக்கொள்வோம்!

தானியேல் உபவாசம் மீண்டும் வந்துவிட்டது! ஆகஸ்ட் 1-21 முதல், சமூக ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குகளிலிருந்து நாம் விலகுவோம் – ஆவிரீதியில் நமக்கு பயனளிக்காத அனைத்திலிருந்தும், இதனால் நித்தியமானவற்றில் நம்மால் கவனம் செலுத்த முடியும்.

பிஷப் மசேதோ விளக்குகிறார், “கர்த்தராகிய இயேசுவின் சிந்தை இல்லாத எவரும் அவரைப் போல நினைப்பதில்லை. கர்த்தராகிய இயேசுவின் சிந்தை உங்களிடம் இருந்தால், அவர் நினைப்பது போல் நீங்கள் நினைப்பீர்கள். ” ஆகையால், பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதன் மூலம் வரும் அவருடைய சிந்தையை நாம் பெற முற்படுவது மிக முக்கியம்.

உங்களுக்கு ஏற்கனவே பரிசுத்த ஆவியானவர் இருந்தால், உங்கள் இரட்சிப்பை தினமும் பராமரிப்பது முக்கியம். கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். பிசாசு நம் மனதை வீணான மற்றும் அசுத்தமானவற்றால் நிரப்ப முயற்சிப்பதை நிறுத்தவில்லை, இதனால் உண்மையான, உன்னதமான, நீதியான, தூய்மையான, அழகான, மற்றும் நற்கீர்த்தியுள்ள எதிலுமே நாம் இனி கவனம் செலுத்த மாட்டோம் (பிலிப்பியர் 4: 8). ஆகவே, இந்த 21 நாட்களும் உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ளவும், உங்களுக்குள் கிறிஸ்துவின் சிந்தையைப் புதுப்பிக்கவும் கூட.

தேவனின் எண்ணங்களைப் பெறுவதற்கு நம்மை சமர்ப்பிக்கவும் தாழ்மையுடன் இருக்கவும் இந்த தானியேல் உபவாசத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும் தகவலுக்கு, தயவுசெய்து எங்கள் 24 மணி நேர ஹெல்ப்லைன், 91 9384638738 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும்.

Event Details

Organizer : UCKG HelpCentre

Start Date : 2021-08-01

End Date : 2021-08-21

More About Event : Go

Event Venue