நீங்கள் எந்த பந்தியில் சாப்பிடுகிறீர்கள்?

“நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.” (I கொரிந்தியர் 10:21)

ஒரு தசமபாகக்காரராக நீங்கள் உங்கள் தசமபாகத்தை தேவனுக்கு கொடுத்து, பின் பிசாசுக்கும் பணம் கொடுக்கக் கூடாது. அது சூதாட்டம், அடிமைத்தனம் அல்லது உங்களின் மோசமான தேர்வுகளால் உங்களை கடனில் ஆழ்த்திய எதுவானாலும் சரி. உங்கள் முதல் 10% நீங்கள் தேவனுக்கு கொடுத்தால், மீதமுள்ள பணம் அவருக்கு எதிராக போகக்கூடாது.

உங்களால் இரண்டு பந்திகளிலும் பங்குகொள்ள முடியாது. தசமபாகம் என்பது தேவனுக்கு ஊழியம் செய்வதையும் அவருக்கு உண்மையாக இருப்பதையும் குறிக்கிறது. எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு கொடுக்க விரும்பினால், அவருடைய அழைப்புக்கு நீங்கள் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும். வெறுமனே தேவனுக்கும் அவருக்கு எதிராக நடக்கிறவைகளுக்கும் ஊழியம் செய்வதென்பது வேலை செய்யாது – இந்தப் பயணத்தில் உண்மையான அர்ப்பணிப்பிற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்படுகிறது.

ஒரு தசமபாகக்காரராக, உங்களுக்கு வருவதில் முதல் 10%-த்தை அவருக்குக் கொடுப்பதன் மூலம் – நீங்கள் ஏற்கனவே தேவனுக்கு சொந்தமானதை நன்றியுணர்வோடும், பாராட்டுதலோடும் அவருக்கு கொடுக்கிறீர்கள். ஏனெனில், எல்லாம் தேவனிடமிருந்து வருகிறது. இப்படித்தான் நீங்கள் இதை பார்க்க வேண்டும்.

இதன் விளைவாக, விசுவாசமுள்ள தசமபாகக்காரர்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை; தேவன் வாக்குறுதியளித்தபடி, தங்களுக்குச் சொந்தமானதை அவர்கள் கோரலாம்.

அக்டோபர் 3-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை யூனிவர்சல் ஆலயத்தில், நாம் முதற் கனியின் விருந்தில் பங்கேற்போம் . இந்த நிகழ்வானது, தேவன் மீது விசுவாசம் வைத்திருக்கும் மற்றும் அவர் அவர்களுக்கு வழங்கக்கூடிய ஆசீர்வாதங்களுக்கு வரம்பை நிர்ணயிக்காத அனைவருக்குமானது.

நிகழ்வு: முதற் கனியின் விருந்து
நாள்: 2021 அக்டோபர் 3, ஞாயிறு
நேரம்: காலை 9.30 மணி

Event Details

Organizer : UCKG HelpCentre

Start Date : 2021-10-03

End Date : 2021-10-03

Time : 9.30 am

Event Venue