இந்த உலகில், நாம் எங்கு பார்த்தாலும் அநீதிகள் உள்ளன. இந்த சூழ்நிலைகள் துரதிர்ஷ்டவசமாக ஒரு உச்சநீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை மற்றும் பல தடவைகள் தேவையான அனைத்து ஆதாரங்களும் இருந்தும், வாழ்க்கையில் அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன…

துரோகம் செய்த கணவன் அல்லது மனைவிக்கு யார் நீதி செய்வார்கள்? தங்கள் வணிகக் கதவுகளை மூட வேண்டியவர்கள், வருமானத்தை இழந்தவர்கள் மற்றும் முன்பு போலவே வணிகத்திற்குத் திரும்ப முடியாதவர்களுக்கு எந்த நீதிமன்றம் ஈடுசெய்ய முடியும்? மருத்துவ வசதி இல்லாததால் இறந்தவர்களுக்கு யார் நீதி செய்வார்கள்?

“சரி, இழப்புகள் வாழ்க்கையின் ஒரு பகுதி, நாம் அதைச் சமாளிக்க வேண்டும்…” என்று சொல்வது எளிது, ஆனால் இது எப்போதும் அப்படி இருக்காது. நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், சரியான நபரிடம் செல்வதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்று நாம் போராடலாம்.

இதனால்தான் ஏப்ரல் 11 முதல் 18 ஆம் தேதி வரை , நாங்கள் நீதியின் வாரத்தை நடத்துகிறோம்.

எந்தவொரு காரணத்திற்காகவும் நீதியைப் பெறுவதற்கு, ஒரு நபர் அதை தீவிரமாகப் பின்தொடர வேண்டும். இது தானாக நடக்காது, சில நேரங்களில் நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, உங்களுக்குக் கிடைக்கும் எல்லா உரிமைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

கர்த்தராகிய இயேசு விடாமுயற்சியுடன் இருந்த விதவையின் உவமையில் இதைக் கவனித்தார்,“அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.” (லூக்கா 18:7-8)

தம்முடைய நீதியின் மீது விசுவாசத்தை வெளிப்படுத்துபவர்களை தேவன் தேடுகிறார். எனவே, ஒரு நபர் தங்கள் பிரச்சினையைப் பற்றி சிணுங்குவதால் எந்தப் பயனும் இல்லை. உரிமை கோருபவர்களுக்கு மட்டுமே நீதி வரும். உங்கள் வாழ்க்கையில் நீதி நடப்பதை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் பரிசுத்த உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

இது உங்கள் நிலைமை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் வழக்கை பரிசுத்த உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவீர்கள், இது உங்கள் எல்லா ஆதாரங்களுடனும் இருக்கும் பலிபீடமாகும். நீங்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 18 வரை ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு அருகிலுள்ள அனைத்து யூ.சி.கே.ஜி உதவி மையங்களிலும் நீதியின் வாரம் நடைபெறும்.

‘நீதிக்காக கூக்குரலிடுங்கள்’ என்பதற்கான ஆயத்தமாகுதலில் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் மதியம் மற்றும் நள்ளிரவில் நாங்கள் UCKG INDIA என்ற எங்கள் Facebook பேஜில் கூக்குரல் செய்வோம்.

தயவுசெய்து உங்கள் முகக்கவசத்தை அணிந்து கொண்டு வரவும் மற்றும் அனைத்து சமூக இடைவெளியின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும். அதிகமான தகவல்களுக்கு நீங்கள் 938 463 8738 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம் அல்லது அழைக்கலாம்.

கூட்டம்: நீதியின் வாரம்
நாள்: ஏப்ரல் 11 முதல் 18 வரை
இடம்: உங்கள் உள்ளூர் யு.சி.கே.ஜி கிளை: Universal Church of the Kingdom of God (https://uckg.in/contact-us/)

 

 

Event Details

Organizer : UCKG Help Centre - India

Start Date : 2021-04-11

End Date : 2021-04-18

Time : 12AM/12PM

Event Venue