உக்ரேனிலிருந்து ஒரு விசுவாசத்தின் கணக்கு
வணக்கம் என் அன்புள்ள நண்பர்களே!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்களுடன் இருப்பதாக!
பிஷப் எடிர் மசேதோவின் ஆன்லைன் கூட்டங்களில் மற்றும் செய்திகளில் பங்கேற்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பிஷப், உங்களை எப்போதும் வழிநடத்தி, உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பி, விசுவாசத்தில் உங்களை பெலப்படுத்தியதற்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்!
நான் தேவனை அறியாமலிருந்தேன் மற்றும் பல இளைஞர்களைப் போல வாழ்ந்துக்கொண்டிருந்தேன் : கொள்ளைகள் மற்றும் திருட்டுகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அதனால் நான் 2003 வரை வாழ்ந்தேன்.
நான் இந்த வழியில் வாழ்ந்துக்கொண்டிருந்தேன், என் இரட்சகரும் கர்த்தரும் ஏற்கனவே எனக்கு இரட்சிப்பை தயார் செய்துவிட்டாரென்று தெரியாமல்.
2003 ஆம் ஆண்டில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அந்த சிறையில், நான் ஒரு புத்தகத்தைப் பெற்றேன், இந்த விஷயத்தில், பைபிள்! பின்னர், பைபிளைப் படித்து, நான் என் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை சந்தித்தேன்.
2015 ஆம் ஆண்டில், யூனிவர்சல் ஆலயத்தின் ஊழியர்கள் மற்றும் போதகர்கள் எங்கள் சிறைக்கு வருகைத் தந்தார்கள். போதகர்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் கேட்கும் போது, தேவன் என்னைத் தொட்டார், அந்த வார்த்தை என் இதயத்தில் நுழைந்து நிலைத்திருந்தது.
ஜெபத்திற்குப் பிறகு, பிஷப் எடிர் மசேதோவின் “இழப்பதற்கு ஒன்றுமில்லை” என்ற புத்தகத்தை போதகர் எனக்கு வழங்கினார்.

அந்த புத்தகம் என்னை விசுவாசத்தில் பலப்படுத்தியது. என்னை வழிநடத்தியது மற்றும் எப்படி போராடுவது மற்றும் வெல்வது என்பதற்கான பார்வையை அளித்தது. மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவோடு ஆவியில் தொடர்ந்து இணைந்திருக்கச் செய்தது.
அது ஒரு அருமையான சந்திப்பு! ஊழியர்கள் மற்றும் மேய்ப்பர்களின் விடுவித்தல்களை அவர்களின் வாழ்வின் மூலம் நான் அங்கு பார்த்தேன். நான் பரிசுத்த ஆவியானவரைத் தேடிய அந்த சமயத்தில், நம் இரட்சகரின் செயலைப் பார்த்தேன்!
என் வாழ்வில் எனக்குள் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்பதை அங்கு நடந்த கூட்டத்தின் போது நான் உணர்ந்தேன். தேவன் என்னைத் தொட்டு, அவருடைய அன்பினாலும் ஒளியினாலும் என்னை நிரப்பினார்.
2018 ஆம் ஆண்டில், நான் தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றேன். என் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நான் நீண்ட காலமாக படிக்க விரும்பிய “இழக்க ஒன்றுமில்லை 2” புத்தகத்தைப் பெற்றேன்.
புத்தகங்கள் மற்றும் பைபிளையும் கொடுத்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அது எனக்கு சிறைச்சாலைக்குள் ஒரு வழிகாட்டியைப் போல இருந்தது! உங்களுடைய புத்தகங்கள் எனக்கும் என் வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இன்று நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன். நான் ஜெபத்திலும் பிரசங்கத்தைக் கேட்பதிலும் நேரத்தை செலவிடுகிறேன். நானும், சிறையில் இன்னும் பலரும் மனந்திரும்பி தேவனுடன் உடன்படிக்கை செய்துள்ளோம்.
உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அதனால் நாங்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியும். நீங்கள் உங்கள் இதயங்களில் வெளிச்சத்தையும் அன்பையும் கொண்டு வருகிறீர்கள். தேவன் உங்களை அபிஷேகம் செய்து, எல்லா இடங்களிலும் உங்களை ஆசீர்வதிக்கிறதை நாங்கள் காண்கிறோம்!
ஆயுள் தண்டனை அனுபவித்தாலும் கூட, தேவன் பிஷப் எடிர் மசேதோவின் ஊழியம் மற்றும் சுவிசேஷத்தின் மூலம் செயல்படுவதை நான் பார்க்கிறேன். போதகர்கள் மற்றும் ஊழியக்காரர்கள் ஆலயங்களில், தெருக்களில், சிறைகளில், அனாதை இல்லங்களில், மருத்துவமனைகளில் ஒரு பெரிய வேலையைச் செய்கிறார்கள்.
எங்களுக்காக ஜெபிக்கும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எனவே, தேவன் எங்களை ஆசிர்வதித்து, எங்கள் இருதயங்களைத் தொட்டு, நாங்கள் இணையம் வழியாகக் கேட்க, படிக்க மற்றும் கூட்டங்களில் பங்கேற்க உதவுவார்.
நாங்கள் உங்களை நேசிக்கிறோம், கிறிஸ்துவின் அன்பை உங்களில் காண்கிறோம்! நாங்கள் எப்போதும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்!
இந்த மகத்தான பணிக்காக நாங்கள் தேவனுக்கு நன்றி கூறுகிறோம். இப்போதைக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரின் ஆத்துமாவையும் புத்தகங்கள் மற்றும் இணையம் மூலம் அடைய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
செர்ஜி சுபோட்னி / ஆயுள் தண்டனை சிறைகைதி – உக்ரைன்
Link in English: Life imprisonment