நீங்கள் வீணாக போராடுகிறீர்கள் என்று உணர்கிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த வாழ்க்கைக்காக போராடுகிறீர்கள், ஆனால் உங்கள் வழியில் எப்போதும் ஒரு புதிய பொருளாதார பின்னடைவை சந்திக்கிறீர்கள்; உங்கள் குடும்பத்தின் ஒற்றுமைக்காக நீங்கள் போராடுகிறீர்கள் ஆனால் உங்கள் வீடு ஒரு போர்க்களம் போல் தெரிகிறது; உங்கள் அன்பின் வாழ்க்கைக்காக நீங்கள் போராடுகிறீர்கள் ஆனால் நீங்கள் இன்னும் தனிமையாக இருக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்காக போராடுகிறீர்கள் ஆனால் நீங்கள் ஒருபோதும் நன்றாக இருப்பதில்லை.

இந்த பிரச்சனைகள் அனைத்திலும் வெற்றிபெற உங்களுக்கு ஏற்கனவே உரிமை உண்டு என்று நாங்கள் சொன்னால் அது எப்படி? இது அனைத்தும் சிலுவையில் தொடங்கியது. கடந்த காலங்களில், சிலுவை என்பது சித்திரவதை மற்றும் மரணத்தின் கருவியாக பயன்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் மரிக்க மற்றும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக செயல்பட சிலுவையில் அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, சிலுவையினுடைய அர்த்தம் மாறியது. மரணம் மற்றும் அவமானத்தின் அடையாளத்திற்கு பதிலாக, அது விசுவாசம், வல்லமை மற்றும் வெற்றியின் அடையாளமாக மாறியது.

சிலுவையில் வல்லமை இருக்கிறது, ஏனென்றால் அங்கே தான் உன்னதமானவர் நம் வலிகளையும் வேதனைகளையும் எடுத்து, நம் பாவங்களுக்காக விலை செலுத்தி, அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் வெற்றியின் உரிமையை வழங்கினார்.

இந்த விசுவாசத்தில், எங்கள் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயேசு சிலுவையில் மரித்த போது நமக்கு அளித்த வெற்றியின் அடையாளமான, பிஷப்புகள் மற்றும் போதகர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட சிலுவையை வழங்கினோம். இருப்பினும், சில பிரச்சனைகளுக்கு மற்றதை விட அதிக முயற்சி தேவை என்பதை நாங்கள் அறிவோம். இந்த சமயங்களில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். விடாமுயற்சி என்பது உங்கள் இறுதி வெற்றி வரை உறுதியாக நிற்பது.

அதனால்தான் நாம் இன்னும் சிலுவையின் வெற்றியின் விசுவாசத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் 3 வாரங்களுக்கு தொடர்வோம், மொத்தம் 5 வாரங்கள் – இயேசுவின் பெயரின் ஒவ்வொரு எழுத்திற்குமான ஒவ்வொரு வாரம். உங்களுடன் சேர்ந்து இறுதிவரை போராடுவோம்! உங்கள் சிலுவையையும் ஒரு ரோஜாவையும் கொண்டு வர மறக்காதீர்கள், ஏனென்றால் நாமும் சிலுவையின் குறியிட்ட ரோஜாவின் நோக்கத்தை தொடருவோம். உங்களிடம் இன்னும் சிலுவை இல்லையென்றால், இந்த வெள்ளிக்கிழமை உங்கள் அருகிலுள்ள யூனிவர்சல் உதவி மையத்தில், மாலை 7.00 மணிக்கு (காலை 8, மற்றும் மதியம் 3 மணிக்கு) அதைப் பெறலாம்.

“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” (I கொரிந்தியர் 15:57)

நிகழ்வு: சிலுவையின் வெற்றி
நாள்: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
நேரம்: மாலை 7.00 (மேலும் காலை 8, மற்றும் மதியம் 3 மணிக்கு)
இடம்: உங்கள் உள்ளூர் யு.சி.கே.ஜி கிளை: https://uckg.in/contact-us/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*