“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.” (சங்கீதம் 41:1-2)

காலை வணக்கம், பிஷப்!

அந்த வார்த்தையை தியானித்து கொண்டிருந்தபோது, இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவி ஏன் முன்னெப்போதையும் விட அதிகமாக நம்மை எச்சரித்து வருகிறார் என்று பார்த்தேன். கர்த்தரின் சாட்சியை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேவன் ஏன் தமது ஊழியத்தை வேடனின் வலையிலிருந்து விடுவித்தார் மற்றும் தப்புவித்தார் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.
எளிமையானது: ஏழைகளுக்கு சேவை செய்யும் பார்வை உங்களுக்கு எப்போதும் இருந்தது மற்றும் இருக்கிறது!

சில நேரங்களில் மக்கள் ஏழையாக இருப்பது பணமில்லாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மை இல்லை என்று நமக்குத் தெரியும். உண்மையில், ஏழையாக இருப்பது என்பது சமாதானமில்லாமலிருப்பது, அன்பில்லாமலிருப்பது, ஆரோக்கியமில்லாமலிருப்பது, ஒன்றுபட்ட குடும்பம் இல்லாதிருப்பது. எல்லாவற்றிற்கும் மேலாக, இரட்சிப்பு இல்லாமலிருப்பது. இது தான் மிகப்பெரிய வறுமை!

அதனால்தான் இந்த உலக மக்கள் தீமையிலிருந்து விடுவிக்கப்படுவதில்லை மற்றும் இந்த பூமியில் ஆசிர்வாதங்களை பெறுவதில்லை. ஏனென்றால் அந்த வாக்குறுதி வறுமையிலிருப்போருக்கு உதவுபவர்களுக்கு மட்டுமே. ஏழைகள் யாரும் விரும்பாத வர்க்கம், நிராகரிக்கப்பட்ட இனம், அதனால்தான் தேவன், அவருக்கு ஊழியம் செய்பவர்களாகிய நாம் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.

நிபந்தனை தெளிவாக உள்ளது: ஏழைகளுக்கு யார் உதவுகிறாரோ அவர் இந்த பூமியில் விடுவிக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவார். மேலும் ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஒரு துண்டு ரொட்டியையோ அல்லது தருமமோ கொடுப்பது மட்டுமல்ல. ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது தேவனுக்கு முன்பாக ஒரு தகுதியான வாழ்க்கையை வாழவைக்கும், இரட்சிக்கும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றும் விசுவாசத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வதாகும். அதுதான் உண்மையான செல்வம்!

இருப்பினும், இந்த உலக மக்கள் பணக்காரர்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள், ஏனென்றால் பணக்காரர்களிடம் கொடுக்க ஏதாவது பொருள் இருக்கிறது. ஆனால் ஏழைகளிடம் கொடுக்க எதுவும் இல்லை. எனவேதான் யாரும் ஏழைகளை விரும்புவதில்லை. அவர்களின் குடும்பம் கூட. அந்த காரணத்திற்காக தான், தேவனால் இந்த உலகத்தை தீமையிலிருந்து அகற்ற முடியாது. ஏனென்றால் அவர்கள் பெற மட்டுமே விரும்புகிறார்கள், ஒருபோதும் கொடுக்க விரும்புவதில்லை.

துரதிருஷ்டவசமாக, பல தேவனுடைய மனுஷர்கள் தங்கள் பார்வையை இழந்துவிட்டனர். அவர்கள் இனியும் ஏழைகளுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதில்லை. ஊழியக்காரர்கள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் தேவனின் ஊழியத்தைச் செய்யும் அனைவரும் மேலே உள்ள இந்த வசனங்களைப் புரிந்துகொண்டது போல கற்பனை செய்து பாருங்கள்! ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்கள் தீமைகளிலிருந்து விடுபட்டு, இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால், எல்லோரும் முன்பை விட ஆத்துமாக்களைக் காப்பாற்ற கடினமாக உழைப்பார்கள். இது முன்னெப்போதும் இல்லாதவாறு இரட்சிக்கப்பட்டவர்களின் பெருக்கமாக இருக்கும்.

கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் இருந்தபோது, அவர் எப்போதும் இதை நமக்கு கற்பிக்க முயன்றார். அவர் எப்போதும் ஏழைகளுடன் இருந்தார், யாரும் விரும்பாதவர்களுடன் இருந்தார். அதனால்தான் தேவன் தம்மை மகிமைக்குரியவிதத்தில் வெளிப்படுத்தினார். உண்மை என்னவென்றால், தேவன் ஐசுவரியவான்கள், பேராசைக்காரர்கள் மற்றும் பெருமையுள்ளவர்கள் மூலம் வேலை செய்வதில்லை, ஆனால் ஏழைகளை அவர்களின் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக ஆக்குவதன் மூலம் வேலை செய்கிறார், பின்வரும் வசனம் சொல்வது போல:

” என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5)

உண்மையில், தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பும் அனைவரும் இந்த உலகிலுள்ள ஏழைகளுக்கு கவனம் செலுத்தினால், எழுதப்பட்டபடி தேவன் அவர்களை தீங்கு நாளில் விடுவிப்பார். மேலும் பூமியில் செழிக்க வைப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் வைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய செல்வமான இரட்சிப்பு அவர்களுக்கு கிடைக்கும்!

தேவன், எந்த நேரத்திலும், மாம்சத்தை காப்பாற்றுவதாக அல்ல அனால் நம் ஆத்துமாவை இரட்சிப்பதாக உறுதியளித்திருக்கிறாரென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தேவன் உங்களையும் திருமதி. எஸ்தர் அவர்களையும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக!

Link in English: the greatest poverty

பிஷப் க்ளீடன் மெலோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*