“ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (மத்தேயு 8:12)
நரகத்திற்குச் செல்பவர்கள் கெட்டுப்போகாத, அழியாத உடலைப் பெற்றிருப்பார்கள். பல்லைக் கடிக்கும் அளவிற்கு அவர்கள் இரண்டாம் மரணத்தின் தண்டனையை அனுபவிப்பார்கள்.
ஐசுவரியாவான் மற்றும் லாசருவின் உவமையில், ஐசுவரியவான் ஆக்கினை செய்யப்பட்டார் மற்றும் அவர் தன்னுடைய நாக்கைப் புத்துணர்வடைய செய்ய விரும்பினார் (லூக்கா 16:24), ஆனால் மிகவும் பெலனான விவரம் என்னவென்றால், அவருடைய பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. அதே போல் தான் தங்கள் இரட்சிப்பை இழக்கும் அனைவருக்கும் நடக்கும். இயேசு புத்தியில்லாத கன்னிகைகளிடம் கூறினார்: “நான் உங்களை அறியேன்” . (மத்தேயு 25:12)
இரட்சிக்கப்படாதவர்களிடம் இயேசு கூறுகிறார்:
“நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்,…” (வெளி 3:17)
பரிசுத்த ஆவி இல்லாதவரிடம் ஏதாவது இருந்தாலும் கூட, உண்மையில் அவரிடத்தில் ஒன்றும்/எதுவும் இல்லை.
தேவனிடத்தில் ஐசுவரியமுள்ளவனாக இல்லாமல், தனக்கென்று பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவனும் அப்படித்தான். (லூக்கா 12.21)
ஏனெனில், நாம் ஆத்துமாவாக இருக்கிறோம், சரீரமாக அல்ல.
கர்த்தராகிய இயேசு நமக்குக் கொடுக்கும் அறிவுரை:
“பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;” (மத்தேயு 6:20)
நாம் அனைவரும் ஒரு புதிய சரீரத்தைப் பெறுவோம். சிலர் நித்திய வேதனைக்காகவும் தண்டனைக்காகவும், பற்களை கடிக்கவும் மற்றும் ஒரு சொட்டு தண்ணீரை விரும்பும் நாக்குகளுடன், மற்றவர்கள் நித்திய மகிமைக்காக.
இரட்சிக்கப்பட்ட நாம், ஒரு புதிய நகரத்தைப் பெறுவோம். மகிமையான சரீரத்தைப் பெறுவோம்.
“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” (பிலிப்பியர் 3:20-21)
நாம் ஒரு புதிய முகவரியைப் பெறுவோம்:
“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;…” (யோவான் 14:2)
நாம் புதிய ஆடைகளை அணிவோம்:
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்;…” (வெளி 3:5)
கர்த்தராகிய இயேசுவோடு நாம் பந்தியில் இருப்போம்:
“…ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து,…” (வெளி 2:17)
ஆக்கினை செய்யப்பட்ட ஐசுவரியவானைப் போலல்லாமல், நாம் பெயரால் அழைக்கப்படுவோம்:
“…புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது” (வெளி 2:17)
நாம் தேவனுக்கு ஊழியம் செய்வோம்:
“அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து,…” (வெளி 22:3)
“ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” (வெளி 21:7)
எனவே, பரலோகராஜ்யம் பலத்தால் கைப்பற்றப்படுகிறது (மத்தேயு 11:12).
ஏனென்றால், நம் இரட்சிப்பை விட பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. அது ஒவ்வொரு நாளும் ஈட்டப்பட வேண்டும்.
அதனால்தான் கர்த்தராகிய இயேசு நமக்கு தினசரி ஆகாரத்தைக் கேட்கக் கற்றுக் கொடுத்தார்.
நம் அன்றாட ஆகாரம் தான் ஒவ்வொரு நாளும் நமக்கு இரட்சிப்பைத் தருகிறது என்பதால்.
Link in English: treasures in heaven
பிஷப் ரெனாடோ வாலண்டே