பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும்போது, அவர்கள் கூடாரத்தை (தேவன் வசிப்பதற்காக எடுத்துச் செல்லக்கூடிய இடம்) எடுத்துச் சென்றனர். அந்த நேரத்தில் சாலமன் மண்டபம் இன்னும் கட்டப்படவில்லை.
கூடாரம் இஸ்ரவேல் மக்களின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்தது, ஏனெனில் அது தேவனின் பிரசன்னத்தை குறிக்கிறது. இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள், கூடாரத்தைச் சுற்றி ஒரு ஒழுங்கான முறையில் முகாமிடுவார்கள் (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்), அவர்கள் செய்த எல்லாவற்றிலும் அவர்கள் தேவனை மையமாக வைத்தார்கள்.

இன்று, இது உண்மையுள்ள தசமபாகக்காரர்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. நீங்கள் தேவனை முழுமையாகச் சார்ந்திருப்பதைக் காட்டும்போது, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மையத்தில் அவரை வைக்கிறீர்கள்.
உங்கள் தசமபாகங்களைத் திருப்பித் தருவது, நீங்கள் தேவனைச் சார்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்தால், அவைகள் எவ்வாறு தவறாகப் போகும்? நமது திறனையோ அல்லது மற்றவர்களின் திறனையோ சார்ந்து நாம் வலியுறுத்துவோமேயானால், நாம் விரும்பும் பரிபூரண வாழ்க்கையை நாம் வாழ மாட்டோம்.
நம்முடைய தசமபாகங்களைத் திரும்பக் கொடுப்பது, நாம் நம்முடைய சொந்த ஞானத்தை சார்ந்து இருக்கவில்லை, மாறாக அவருடைய ஞானத்தையே சார்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், நாம் அதை பயபக்தியுடன் செய்ய வேண்டும்: பதிலுக்கு அவர் நமக்கு அளிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி மட்டும் வெறுமனே சிந்திக்காமல், அவர் நம் வாழ்வில் என்ன செய்கிறார் மற்றும் செய்திருக்கிறார் என்பதற்கு நன்றி செலுத்துவதற்காக நாம் அதைச் செய்ய வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் மையத்தில் தேவனை வைக்க தேர்ந்தெடுங்கள். நவம்பர் 7-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு (மேலும் காலை 7.00 மணிக்கும்) இந்த தசமபாகக்காரர்களின் சிறப்பு அபிஷேகத்தில் எங்களுடன் இணையுங்கள். பிரேசிலில் உள்ள சாலமன் மண்டபத்தில் உள்ள தேவனுடைய வாசஸ்தலத்தின் பிரதிகளுக்கு அனைத்து தசமபாகக்காரர்களின் பெயர்களும் எடுத்துச் செல்லப்படும். அங்கு எங்கள் பிஷப்புகளும் போதகர்களும் உங்கள் சார்பாக, உங்களின் தினசரி ஆகாரத்திற்கு பற்றாக்குறை வராமலிருக்க மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஆவிக்குரிய விதத்தில் தேவனோடு நீங்கள் ஐசுவரியவானாக இருக்கவும் ஜெபிப்பார்கள்.
நீங்கள் தசமபாகக்காரராக இல்லாதவராக இருந்தாலும், இந்தச் சிறப்பு கூட்டத்தில் எங்களுடன் சேர விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களை அறிய விரும்பினால், எங்கள் ஹெல்ப்லைனை அழைக்கவும் அல்லது +91 9384 638 738 என்ற எண்ணில் எங்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும்.
தேதி: ஞாயிறு, 7 நவம்பர் 2021
நேரம்: காலை 9.30 மணி (மேலும் காலை 7.00 மணிக்கு)
இடம்: உங்கள் உள்ளூர் யு.சி.கே.ஜி கிளை