உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்களைப் பின்தொடரும் உங்கள் கடந்த காலத்தைப் பற்றி என்ன? எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் பாதுகாப்பின்மை என்ன?

வேதாகமத்தில், யாக்கோபு யாப்போக்கின் ஆற்றின் துறையில் இருந்தபோது, அவர் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணத்தை எதிர்கொண்டார்:

அவருடைய அதே வாழ்க்கையுடன் தொடர்வது அல்லது அவரது உட்புற பிரச்சினைகளை ஒரேடியாக தீர்ப்பது. அங்கு அவர், அவரது பொய்கள், அவர் யார், அவருடைய நினைவுகள், அச்சங்கள் மற்றும் அவரைத் தொந்திரவு செய்த எல்லாவற்றிலிருந்தும் தன்னை வெறுமையாக்கத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு புதிய அடையாளத்தை நாடினார் (ஆதியாகமம் 32).

யாபோக்கின் ஆற்றின் துறை

இதனால்தான் எல்லா யூ.சி.கே.ஜி உதவி மையங்களிலும், யாக்கோபு இந்த போரை போராடிய இடமான “யாப்போக்கின் ஆற்றின் துறை”, என்கிற இந்த மாபெரும் சிறப்பு நிகழ்ச்சியின் விசுவாசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

யாப்போக்கின் ஆற்றின் துறையில், யாக்கோபைப் போலவே நீங்களும் தனிமையாக உணர்ந்தால் அல்லது ஒருவேளை நீங்கள் வலிமையில்லாமல், திசை தெரியாமல் மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதென்றால், தேவனுக்கு முன் உங்களை அறிமுகப்படுத்த இந்த வாய்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மட்டுமே இந்த ஆவிக்குரிய போரில் போராட முடியும். ஒரு சிறு ஆலோசனை; ‘ஏன்’ என்று கேட்காமல், கேள்வியை மாற்றிக் கொள்ளுங்கள்: ‘கர்த்தரே! நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?’ என்று கேளுங்கள். தேவனைக் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, அவருடைய வாக்குறுதிகளையும், முன்பு அவரோடு நீங்கள் செய்த பொருத்தனைகளையும் சந்தேகிப்பதற்கு பதில், ‘நான் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்?’

என்று கேளுங்கள். சிறப்பு 10 மணி

இரவு ஜெபத்தால் ஊக்கமடையுங்கள் நீங்கள் தேவனிடம் உங்களை முன்வைக்க விரும்பினால், ஜூம் செயலியில் ஒளிபரப்பப்படும் இரவு 10 மணி ஜெபத்தில் பங்கேற்கவும்.

இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு நடைபெறும். சிறப்பு 10 மணி இரவு ஜெபம், ஒரு புதிய அடையாளத்தை விரும்பும் நபர்களுக்கு, ஒரு அருமையான நேரம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*