தேவனுக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் செய்யும் வேலைகளுடன் இணைப்பது என்பது மிகவும் பொதுவானது, ஆனால் தேவன் கிரியை(வேலை) என்ற வார்த்தைக்கு என் கவனத்தை ஈர்த்தார்.

ஆசியாவிலுள்ள ஆலயங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் (7 சபைகளுக்கான வெளிப்பாடுகள்), எபேசு ஆலயத்திற்கு எதிராக தம்மிடம் இருப்பதை தேவன் சுட்டிக்காட்டினார், இருப்பினும், அந்த ஆலயம் அதன் “கிரியைகளில்” சரியானதாகத் தோன்றியது.

எப்படி அந்த சபையை மெச்சாமல் இருக்க முடியும்? ஒரு கிறிஸ்தவராக, தேவனுடைய ஊழியத்திற்கு அவசியமான அனைவரின் கண்களிலும் காணப்பட்ட அவர்களின் அணுகுமுறைகள், பொய்யான கோட்பாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான உண்மையான சான்றுகள் மற்றும் அயராத அர்ப்பணிப்பு அவர்களிடம் மிகவும் சரியாக இருந்தன.

எனினும், கர்த்தராகிய இயேசு சொன்னபோது:

” உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும்,
…என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.”
(வெளி 2:2,3)

முதல் வாக்கியம் இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். இரண்டிற்கும் தொடர்புகள் இருந்தாலும், அவை இரண்டும் ஒன்றே அல்ல என்ற கருத்தை அது தருகிறது!

“ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; “ (வெளி2:5)

அதன்பிறகு, மீண்டும், கிரியைகள் என்ற வார்த்தை, தேவன் அதிருப்தியில் தீர்மானித்த ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எப்படி நீங்கள் ஆதியில் செய்த கிரியைகளுக்குத் திரும்ப முடியும்? அவர்கள், தாங்கள் செய்யும் ஊழியத்தில் அயராமல் இருந்தால், தங்கள் நடத்தையில் தங்களை நேர்மையாகவும் உண்மையாகவும் வைத்திருந்தால், அவர்களின் முதல் கிரியைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அவர்கள் வீழ்ந்ததை போல இல்லாமலிருந்தால்? அன்பும் அப்படியாகத்தான் அவர்களுக்கு தோன்றியது!

வெளிப்படையாக, அவர்கள் ஆதியில் செய்த “கிரியைகள், அவர்களுக்கு மாறியதாகத் தெரியவில்லை, ஆனால் அது மாறி இருக்கிறது! நாம் கிரியைகளை, பிரயாசமாகப்(வேளைகளாக) பார்த்தால் (தேவனுக்காக என்றாலும்), அது உண்மையில் இந்த ஆலயத்துடன் பொருந்தாது. ஏனெனில், கிரியைகள் என்பது ஒன்று, பிரயாசம் என்பது வேறு.

ஒரு அகராதியைக் கலந்தாலோசித்ததில், அறிவார்ந்த உற்பத்தியான ஒன்றை ஒரு கிரியையாக கருத முடியும் என்பதையும் பார்த்தேன். ஒரு கட்டட கட்டுமானத்தில் கூட, பிரயாசத்தை (வேலையை), அந்த தொழிலாளர்கள் அதைச் செய்வதற்கு முன்பு, அது முதலில் ஒருவரின் மனதில் கிரியை கட்டப்படுகிறது.
கிரியைகள் என்பது யோசனைகள், எண்ணங்கள், நோக்கங்களின் கட்டுமானத்துடன் தொடர்புடையது. மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதோடு தொடர்பிருக்க வேண்டிய அவசியமில்லை.

மறுபுறம், சிமிர்னா ஆலயம் அதன் வேலைக்காக குறிப்பிடப்படவில்லை, ஆனால் அங்கீகரிக்கப்பட்டது.
எபேசுவும் செய்தார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு அவர்களை பிரயாசத்திற்காக(வேலைக்காக) எச்சரிக்கவில்லை (அது காணப்படுகின்ற ஒன்று), ஆனால் கிரியைகளுக்காக(இது பார்க்கப்படவில்லை) எச்சரித்தார்.

கிரியைகள் என்பது செய்வது அல்ல, ஆனால் ஏதாவது செய்யப்படும் வரை அதற்காக கட்டமைக்கப்படுகின்ற யோசனைகள். இது தேவனுடன் நேரடியாக தொடர்புடைய நம் மனசாட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதியில் செய்த கிரியைகளில், தீயா நோக்கங்கள், விமர்சனம், தீமை, புகார், குறைபாடு, வழக்கம், சந்தேகம், போட்டி, தனிப்பட்ட ஆர்வம், சுய ஊக்குவிப்பு போன்றவைகளுக்கு இடமில்லை…

கிரியைகள் உள்ளே நடைபெறுகின்றன, பிரயாசங்கள்(வேலைகள்) வெளியே நடத்தப்படுகிறது – அணுகுமுறைகள், செயல்களின் மூலம்!

“மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.” (நீதிமொழிகள் 16:1-3)

Link in English: What is the difference between WORK and WORKS?

ஃபிளாவியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked*